தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் – ஃபாதர் ஜகத் காஸ்பரின் உரை

Posted in Uncategorized on December 21, 2008 by savetamil

ஈழத்திற்கான இறுதி யுத்தம் என்பது ஈழத்திற்கு வெளியே அதாவது உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர்களின் அறிவுக் களத்தில் தான் நடக்கும். அந்த அறிவுக்களத்தில் இருந்து போராட தகவல் தொழில்நுட்பத் துறையினர் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஃ பாதர் ஜகத் காஸ்பரின் உரை கூடியிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்- பழ.நெடுமாறன் உரை

Posted in Uncategorized on December 15, 2008 by savetamil

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்- பழ.நெடுமாறன் உரை பாகம் I

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்- பழ.நெடுமாறன் உரை பாகம் II

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் – வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவு

Posted in Uncategorized on December 13, 2008 by savetamil

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் – வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவு
s50010561

உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது

Posted in Uncategorized on December 13, 2008 by savetamil

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு ஐயா பழ.நெடுமாறன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

போராட்டம் நெடுமாறன்

போராட்டம் நெடுமாறன்

போராட்டம்

போராட்டம்

தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்-நிகழ்வுகள்

Posted in Uncategorized with tags , , , on December 13, 2008 by savetamil

நண்பர்களே, இலங்கை பேரினவாத அரசின் தமிழர் படுகொலைகளை கண்டித்து தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளனர். தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாள்: 13-டிசம்பர்-2008, சனிக்கிழமை
நேரம்: காலை 08:00 – மாலை 06:00
இடம்: கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்த சிக்னல் அருகில். (கோயம்பேடு – அண்ணாநகர் மார்க்கம்)

நிகழ்வுகள்
1 தனி ஈழம் கோரிக்கைக்கான காரணங்களும், அறவழிப் போராட்டங்களும் – பழ.நெடுமாறன் 9:00
2 சிங்கள அரசின் இனப்படுகொலைகளும், ஆயுதவழிப் போராட்டப் பாதையும் – இராசேந்திர சோழன் 9:30
3 சிங்கள அரசின் மனித உரிமை மீறல்களும், ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் துயரங்களும் – பேரா.கல்யாணி 10:00
4 ஈழம் தொடர்பான தொடர் ஓவியம் – புகழேந்தி 10:30
5 திரிகோணமலையின் முக்கியத்துவமும், ஈழப்பிரச்சினையில் உலக நாடுகளின் நிலையும் – சுப.வீ 11:00
6 இந்திரா காந்தி காலத்தில் ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடும், இந்தியா (இந்திரா, எம்ஜிஆர்) செய்த உதவிகளும் – ஓவியா 12:00
7 ராஜீவ் காலத்தில் இந்தியாவின் நிலையில் ஏற்பட்ட மாற்றமும், இலங்கையில் இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களும்- விடுதலை இராசேந்திரன் 0:30
8 ராஜீவ் கொலைக்குப் பின் இந்திய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும், உலக நாடுகளின் நிலைப்பாடும் – விடுதலை இராசேந்திரன்
9 உலக விடுதலைப் போராட்டங்களும், ஈழப் போராட்டத்தின் பொருத்தப்பாடும் – தியாகு 1:00
10 ஈழப் பிரச்சினையில் இந்திய ஊடகங்களின் பாரபட்சமான அணுகுமுறை – டிஎஸ்எஸ் மணி 1:30
11 எதை நோக்கி ஈழம்? – காசி அனந்தன் 2:00
12 ஈழ அகதிகளின் துயரம் – ஜெகத் கஸ்பார் 2:30
13 எஸ்.ராமகிருஷ்ணன், அருள்மொழி, சீமான், Mafoi பாண்டியன் மற்றும் சில பார்வையாளர்கள் 3:00
14 தமிழ்ச் சமூகம் நம்மீது (IT people) வைக்கும் விமர்சனங்களும், நாம் தேடவேண்டிய பதில்களும் – இரமேஷ் 5:00
15 சமூக, அரசியல் மாற்றத்தில் நாம் வகிக்க வேண்டிய பங்கு – பிரபாகர் 5:20
16 கோரிக்கைகளை விளக்கிப் பேசுதல் – செந்தில் 5:40

தமிழர்களுக்கெதிராக இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத அறப் போராட்டம்

Posted in Uncategorized with tags , , , , , on December 9, 2008 by savetamil


OMR சாலையில் டபுள் பெட்ரூம் பிளாட் வாங்குவது பற்றி திட்டமிடுகிறோம் நாம். மேலிருந்து விழும் குண்டுகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக குடிசைகளிலிருந்து வெளியேறி காடுகளில் தஞ்சம் புகுகிறார்கள் அவர்கள்.

இரவு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் நாம். பகலில் கடிக்க வரும் பாம்புகளிலிருந்துதப்பிக்கும் வழியறியாது அடர்ந்த வனங்களில் நித்தம் இறக்கிறார்கள் அவர்கள்.

அடுத்த வேளை KFC Chicken- அல்லது Pizza Hut- என்று நண்பர்களுடன் பேசுகிறோம் நாம். நாளைக்காவது ஒரு வேளை உணவு கிடைக்குமாஎன்று சொந்த நாட்டில் அகதிகளாகத் தவிக்கிறார்கள் அவர்கள்.

பொங்கலுக்கு ஊருக்குப் போக இரண்டு மாதங்களுக்கு முன்பே online reservation செய்கிறோம் நாம். எப்போது தாய்நாடு போவோம் என்பது குறித்துயாதொரு நம்பிக்கையுமின்றி அகதிகளாக உலகெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் அவர்கள்.

சத்யம் சினிமா, MGM ரிசார்ட், சனிக்கிழமை இரவு கொண்டாட்டங்கள் என சுகமாய் வாழ்கிறோம் நாம். ஒவ்வொரு நொடியைக் கழிப்பதும்போராட்டமாய் வாழ்கிறார்கள் அவர்கள்.

நாமும் தமிழர்கள், அவர்களும் தமிழர்கள் எனில், அவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?

செய்ய வேண்டியது ஆயிரம் இருப்பினும், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான நமது எதிர்ப்பை, ஈழத்தமிழர்களுக்கான நமது ஆதரவைத்தெரிவிக்க ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்போம், வாருங்கள் நண்பர்களே!

நாள்: 13-டிசம்பர்-2008, சனிக்கிழமை

நேரம்: காலை 08:00 – மாலை 06:00

இடம்: கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்த சிக்னல் அருகில். (கோயம்பேடு அண்ணாநகர் மார்க்கம்)

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்.

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி உண்ணாவிரதம்

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி உண்ணாவிரதம்

Tamilish

தமிழின படுகொலைக்கு எதிராக ஐ.டி பொறியாளர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம்

Posted in Uncategorized on December 8, 2008 by savetamil

இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம்

Hello world!

Posted in Uncategorized on December 6, 2008 by savetamil

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!